×

அடுத்தாண்டு அக்டோபரில் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சோதனை

தித்வானா: இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வே சிபிஆர்ஓ வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜஸ்தான் மாநிலம் தித்வானா மாவட்டத்தில் உள்ள நவன் நகரில் ஜோத்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட குதா-தடானா மித்ரியில் இருந்து வடக்கு நவான் ரயில் நிலையம் வரை 60 கி.மீ தொலைவில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. சுமார் 819.90 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதையின் அதிவேக சோதனைப் பாதையானது அடுத்தாண்டு அக்டோபரில் நடைபெறும். இது இந்தியாவின் முதல் அதிவேக ரயில்பாதை சோதனையாக இருக்கும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை போன்று, இந்த ரயில் பாதையின் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச தர ஆய்வு அமைப்புகளின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் ரயில்வே ஆராய்ச்சி மற்றும் தரநிலை அமைப்பானது, இந்த அதிவேக ரயில் பாதையை உருவாக்கி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அடுத்தாண்டு அக்டோபரில் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் சோதனை appeared first on Dinakaran.

Tags : India ,Ditwana ,North West Railway CPRO ,Indian Railways ,Nawan ,Rajasthan ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...